0 0
Read Time:1 Minute, 12 Second

விஜய் தனது 65-வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வேகமாக நடந்து வருகிறது.

தளபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் ஃபஸ்ட் லுக் எல்லாம் வெளியானது. படப்பிடிப்பு இப்போது ஓரளவிற்கு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு இடையில் தளபதி தனது 66வது பட இயக்குனரை முடிவு செய்துவிட்டார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்க இருக்கிறார், அவரும் நிறைய ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார்.

வரும் அக்டோபர் 15ம் தேதி படத்தின் பூஜை போடப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன. இப்போது இந்த நாயகி யார் என்ற பேச்சு ரசிகர்களிடம் அடிபடுகிறது. நாயகிகள் தேர்வில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஷ்மிகா தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %