0 0
Read Time:2 Minute, 2 Second

பண்ருட்டி நகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் 12 பேர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களில் 6 பெண்கள் மட்டும் வேலைக்கு வந்தால் போதும், மற்ற 6 பேர் வேலைக்கு வேண்டாம் என்று நிர்வாகம் அவர்களை வேலையில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 6 பெண்கள் நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பண்ருட்டி நகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் 12 பேர் நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் சம்பளம் பெற்று கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து வேலை செய்து வந்தோம். கொரோனா, புயல், மழை வெள்ள காலங்களிலும் 3 வேளையும் உயிரை பணயம் வைத்து உணவு தயாரித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி வந்தோம். இதில் வேலை செய்யும் பெண்கள் கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மிகவும் ஏழ்மை நிலையிலும் இருக்கிறோம். இந்நிலையில் எங்களில் 6 பேருக்கு வேலை இல்லை என்று நகராட்சி அதிகாரிகள் கூறி விட்டனர். ஆகவே நீக்கப்பட்ட 6 பேர் உள்பட 12 பேரும் நிரந்தரமாக பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற கலெக்டர் பாலசுப்பிரமணியம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %