0 0
Read Time:1 Minute, 46 Second

சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு கையகப்படுத்தி அதையடுத்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிக்கு பணி நிறைவு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி கருணை அடிப்படையில் பணி நியமனம் அமர்த்தப்பட்டு பணியாற்றி வந்தனர் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றக் கோரியும் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார் முன்னாள் பொதுச் செயலாளர் ரவி மனோகர் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் பல்கலைக்கழக நிரந்தர ஊழியர்கள் மற்றும் தொகுப்பூதிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %