0 0
Read Time:2 Minute, 24 Second

மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் S.ராஜகுமார் M.A L.L.B MLA அறிவுறுத்தலின் படி மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த தினவிழா மயிலாடுதுறையில் கொண்டாடப்பட்டது. காமராஜர் மாளிகையில் அவரது திருஉருவப் படத்தை அலங்கரித்து, மயிலாடுதுறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் R.ராமானுஜம் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் மிலிட்டரி செல்வராஜ், முத்துசுவாமிநாதன், C.காளிதாஸ், ஹாஜீ S.அந்தோனிசாமி
புத்தகரம் சுமதி, S.S.குமார், எத்திராஜலு, கல்யாண சுந்தரம், தீன தயாளன், C.மனோ, M.பார்த்திபன்
G.செந்தமிழன் ராம் ஆகியோர் முன்னிலையில் நடிகர் திலகம் திருஉருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கிட்டப்பா அங்காடியில் மாவட்ட சிவாஜி மன்ற சமுக பேரவைத்தலைவர் மூவலூர் ரங்கநாதன் தலைமையில், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் R.ராமானுஜம், ஐயப்பன் ராஜேந்திரன், M.A.P.R.நவாஸ், K.கமலநாதன்,மதிவாணன், ராஜா,V.A.O.லோகநாதன், ஆகியோர் முன்னிலையில் நாட்டுப்புறக் கலைஞர் கிங் ஃபைசல் சிவாஜியின் வேடமணிந்து நகரின் முக்கிய வீதிவழியாக மேள வாத்தியங்கள் முழங்க கிட்டப்பா அங்காடிக்கு வந்து அங்கு அலங்கரித்து வைத்திருந்த சிவாஜிகணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் பண்ணை சொக்கலிங்கம், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், தலைமை கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %