சிதம்பரம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் வழி தவறி வரும் குழந்தைகளை கையகப்படுத்தி பாதுகாப்பில் ஒப்படைத்து விழிப்புணர்வு கூட்டம் ஆய்வாளர் அருண் குமார் தலைமையில் நடைபெற்றது. வணிக கண்காணிப்பாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் முகுந்தன் கலந்து கொண்ட கூட்டத்தில் வழி தவறி வரும் குழந்தைகளை எவ்வாறு கையகப்படுத்தி காப்பகத்தில் ஒப்படைப்பு பற்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கை குறித்தும் மற்றும் குழந்தைகள் உதவி மையம் 1098 பற்றியும் ரயில் பயணிகளும் மற்றும் பொதுமக்களிடம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சட்டமான போஸ்கோ சட்டம் குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகியவற்றை விளக்கி பேசினார் கூட்டத்தில் உதவி ஆய்வாளர் அன்பு ஜூலியட் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.