தேசப்பிதா காந்தியடிகள்152-வது பிறந்த நாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 42-வது நினைவு நாளை யொட்டி சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி .ஐ துறை சார்பில் அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் கீழ வீதியில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.ஐ.துறை மாநில பொது செயலாளர் பி. ஸ்டீபன் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். ராஜா சம்பத் குமார் வரவேற்றார். முன்னாள் நகர துணை தலைவர் ஆர்.சம்மந்தமூர்த்தி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ .நூரலி சிறுபான்மைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் டேனியல் சந்துரு ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சிவசக்தி ராஜா ஓ.பி.சி பிரிவு தலைவர் குமரவேல், முன்னாள் நகர துணைத்தலைவர் ஆர்.வி .சின்ராஜ் கடலூர் மாவட்ட ஆர்.டி.ஐ துறை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட தலைவர் ஏ. ராதாகிருஷ்ணன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிள்ளை சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துக்கொண்டு காந்தி மற்றும் ராஜீவ் காந்தி முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். தில்லை ஆர். மக்கின் ஜெமினி எம்.என்.ராதா பரங்கிப்பேட்டை தெற்கு வட்டார தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார தலைவர் சுந்தரராஜன் முன்னாள் நகர செயலாளர் ஆட்டோ டி குமார்
கஜேந்திரன் மணலூர் ரவி ஆர்.டி.ஐ. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்தராஜன் முன்னாள் நகர துணைத்தலைவர் என்.நடராஜன் முன்னாள் பொருளாளர் சம்பந்தம் பேன்சி எஸ் எஸ் எஸ்.நடராஜன் நகர பொருளாளர் செய்யத் மிஸ்கின், நகர முன்னாள் செயலாளர்கள் ஆலா (எ) தினேஷ், கஜேந்திரன், குணா, ஆர்.டி.ஐ மாவட்ட நிர்வாகிகள் ஜெயச்சந்திரன் ஆர்.டி.ஐ துறையைச் சார்ந்த சிதம்பரம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், செய்யப்படுவதால் சிதம்பரம் நகர துணைத் தலைவர் அசோக்குமார், செயலாளர் மணி, ரூபன் ஆர்டி.ஐ மாவட்ட நிர்வாகிகள் ரஞ்சித், விக்னேஷ், பாலாஜி, சுந்தரராஜன், மகளிர் அணியைச் சேர்ந்த தில்லை செல்வி கோ.ஜனகம், மாலா, ராதா, ருக்குமணி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் முன்னாள் நகர துணைத் தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.