0 0
Read Time:1 Minute, 19 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் வழங்கிய பனை விதையினை மயிலாடுதுறையிலிருந்து வானாதராஜபுரம், அஞ்சலாறு, கதிராமங்கலம் வரை நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் முன்னிலையில் பனை விதை நடவு செய்யப்பட்டது.

மனிதத்தையும் மண்ணையும் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜோதி பவுண்டேஷன் சார்பில் ஐந்தாம் கட்டமாக பனை விதையினை நடவு செய்யப்பட்டது. நிகழ்வில் பனை விதையின் பலன்கள் நீர்வளம் மண் வளம்காப்பது குறித்து மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தபட்டது. நிகழ்வில் ஜோதி பவுண்டேஷன் செயலாளர் மணிகண்டன் பொருளாளர் செந்தூர், செந்தில்நாதன், உறுப்பினர்கள் சமூக சேவகி கவிதா ஆசிரியை ஜெயந்தி ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %