மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியம்,விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 72 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த
காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சோ.முருகதாஸ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சு.முருகண்ணன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வாசுதேவன், வருவாய் கோட்டாட்சியர்கள் (மயிலாடுதுறை) பாலாஜி, (சீர்காழி) நாராயணன் உள்பட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.