0 0
Read Time:1 Minute, 7 Second

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அலுவலர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் மனு அளிக்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் தடுப்பூசி முகாம் ஒன்றை தயார் செய்து இருந்தனர். புகார் மனுக்களை அளித்து வந்த பொதுமக்கள் பலரும் தடுப்பூசி செலுத்தி சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %