0 0
Read Time:5 Minute, 2 Second

தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் 7 மணி நேரத்திற்குப் பிறகு செயல்படத் துவங்கின!.

வாட்ஸ் அப், பேஸ்புக் பல மணி நேரம் முடக்கத்திற்குப் பின் மீண்டும் செயல்படுகிறது இன்ஸ்டாகிராம், மெசேஞ்சரும் 7 மணி நேரம் முடங்கியது.

சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கிய நிலையில், சுமார் 7 மணி நேரத்துக்கு பின் அவை மீண்டும் செயல்பட தொடங்கின. இரவு முதல் அதிகாலை வரை வாட்ஸ் அப், பேஸ்புக் இல்லாமல் பயனாளர்கள் பலரும் தவித்துப் போய் விட்டனர்.

இந்த சமூக வலைத்தள பக்கங்கள் நேற்றிரவு முதல் திடீரென முடங்கின. என்னவாயிற்று என்று பலரும் ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்தனர். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த சேவை முடங்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சேவைகள் முடங்கின. ஐ.பி.எல் தொடர்பான தகவல்களை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று ஒரு தரப்பும், நண்பர்கள், நண்பிகளிடம் சாட் செய்ய முடியவில்லை என்று ஒரு தரப்பும் டுவிட்டரில் ஆதங்கத்தை கொட்டினர்.

அறிக்கை வெளியிட்ட வாட்ஸ் அப்

தங்களின் சேவை முடங்கியது குறித்து அறிக்கை வெளியிட்டு வாட்ஸ் அப் நிறுவனம், ”சிலர் தற்போது வாட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விஷயங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம், விரைவில் இங்கே ஒரு புதுப்பிப்பை அனுப்புவோம்” என்று கூறியது.

பேஸ்புக் மன்னிப்பு

தங்கள் சேவையில் தடங்கல் ஏற்பட்டதற்காக பேஸ்புக் மன்னிப்பு கேட்டுள்ளது, இது தொடர்பாக பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் இந்த சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்” என்று பேஸ்புக் தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள் தவிப்பு

கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் சேவை மீண்டும் கிடைக்கும் என்று பேஸ்புக் கூறியது. சுமார் 7 மணி நேரத்துக்கு பின் அவற்றின் சேவை மெல்லமெல்ல சரி செய்யப்பட்டது. அதிகாலை 4 மணி முதல் சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. சமூக வலைத்தளப்பங்கள் இயங்காமல் போனதால் வாடிக்கையாளர்கள் தவித்துப்போயினர்.

சரி செய்யப்பட்ட பாதிப்பு

இது மிகப் பெரிய சேவை பாதிப்பு என டவுண்டிடெக்டர் நிறுவனம் கூறியுள்ளது. உலகம் முழுவதும் 10.6 மில்லியன் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. எனினும், இது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் சுமார் 17 நிமிடங்கள் இந்த சேவைகள் முடங்கி மீண்டது.

நிம்மதி பெருமூச்சு

தற்போது, 7 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக் மெசெஞ்சர் (messenger) ஆகியவற்றின் சேவை முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 7 மணி நேர முடக்கத்திற்குப் பிறகு சமூக வலைத்தளப்பங்கள் செயல்படத் தொடங்கியதால் பயனாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %