0 0
Read Time:2 Minute, 50 Second

புரட்டாசி மாதங்களில் வரும் மஹாளய அமாவாசையை அன்று புண்ணியஸ்தலங்களிலும், கடற்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

’மஹாளய அமாவாசை’- மயிலாடுதுறையில் தடையை மீறி நீர்நிலைகளில் திரண்ட மக்கள்...!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கு படை எடுப்பதும் வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை முன்னேற்பாடு காரணமாக இன்று கடற்கரை, காவிரிக்கரை மற்றும் கோயில்களில் வழிபாட்டுக்காக கூடுவதற்கு பக்தர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்துள்ளார்.

புரட்டாசி மகாளய அம்மாவாசை முன்னிட்டு காவிரி ஆறு மற்றும் கடற்கரைகளில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க திரண்டால் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை மற்றும் காவிரி ஆறுகளில் பொது மக்கள் கூட  தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் தடை உத்தரவை மீறி பொதுமக்கள் காலை முதல் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வருகின்றனர். காவல் துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாத பொதுமக்கள் ஏராளமானோர் காவிரி கட்டத்தில் திரண்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் முன்னதாக கிளாக் கட்டத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வரும் பொதுமக்களை விரைவாக திதி கொடுத்து விட்டு திரும்பும் மாறும் புதிதாக வருபவர்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %