தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மயிலாடுதுறையை மேம்படுத்த நகராட்சி ஆணையர் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ ராஜகுமார் தலைமையில் 05.10.21 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு விமலம்பிகை திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அறம்செய் அறக்கட்டளையின் சார்பில் மகாதான தெருவில் உள்ள மதுக்கடை அகற்றப்பட வேண்டும் எனவும், மழைக் காலம் தொடங்குவதால் பாதாளசாக்கடை பிரச்சனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் குளங்களை தூர்வாரி வாய்க்கால் வழித்தடங்களை சுத்தம் செய்து நீர் நிலைகளில் நீர் நிரப்பி பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் நகராட்சிக்கு சொந்தமான குளங்களை மீன்பிடி குத்தகைக்கு விட்டால் நகராட்சிக்கும் வருமானம் கிடைக்கும், இலவச கழிப்பிடம் மற்றும் கட்டணக் கழிப்பிடங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும், கண்ட கண்ட இடங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து குப்பை மேலாண்மை படுத்த வேண்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி பயன்பாட்டில் இல்லாத சந்து சாலைகளை உபயோகப்படுத்தவும், காவிரி துலா கட்டம் பாலத்தை பெரிய பலமாக அமைத்து போக்குவரத்தை சரி செய்யவும், நிறைய வீதிகளில் இருக்கும் தண்ணீர் டேங்குகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதை சரி செய்யவும், மேம்பாலம் கைப்பிடி சுவர்கள் மாற்றியமைத்து மிக உயரமான தடுப்புச் சுவர்கள் வைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஒரு சில குளங்களை சுத்தம் செய்து சுற்றி வாக்கிங் செல்ல பாதை அமைத்து கம்பி அடைத்து, விளக்குகள் போட்டு அழகாய் மாற்றி அமைக்கவும் , குழந்தைகளுடன் விளையாட பூங்காக்கள் சரி செய்ய வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கி கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
source: mayilaiguru