வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, கோவை, தேனி, திண்டுக்கல், குமரியில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளைய தினம் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூரில் கனமழையும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகிற 10-ந் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 24 மணி நேரத்திற்கு அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.