0 0
Read Time:2 Minute, 44 Second

கடலூா் மாவட்டத்தில் 278 இடங்கள் தாழ்வான பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி கூறினாா்.

மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா். தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் பேரிடா் தொடா்பான தகவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தாா். கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலா் கூறியதாவது:

மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வடிகால் வாய்க்கால், கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரும் பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும். ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகளை தொடா்ந்து கண்காணித்து, மழைக் காலத்தில் அவற்றின் கொள்ளளவுக்கு ஏற்ப தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

மாவட்டத்தில் தாழ்வான, மிகவும் தாழ்வான பகுதிகளாக 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள 19 மண்டல அலுவலா்கள் நிலையிலான குழுவினா் புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு மையம், தற்காலிக தங்குமிடம், பேரிடா் காலத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட வேண்டிய இடங்களை அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ததில் 80 சதவீதம் முன்னேற்பாடு பணிகள் முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய பணிகளை ஒருவார காலத்துக்குள் முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் எஸ்பி சி.சக்திகணேசன், கூடுதல் ஆட்சியா்கள் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %