0 0
Read Time:3 Minute, 33 Second

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த வேட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதை தொடர்ந்து வேட்டங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இந்த ஊராட்சியில் இடைத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

ஊராட்சி தலைவர் கொரோனாவல் மரணம் - மயிலாடுதுறையில் ஒரே ஒரு ஊராட்சிக்கு மட்டும் வாக்குப்பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்திலேயே இந்த ஊராட்சியில் மட்டும் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த வேட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் மூன்று பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். மீதமுள்ள 5 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இரண்டு வேட்பாளர்கள் அதிமுக மற்றும் திமுக ஆதரவிலும் மற்றவர்கள் 3 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் நிற்கின்றனர். 

இந்த ஊராட்சியை பொறுத்த வரை மொத்தம் ஒன்பது வார்டுகளில் 4,243 வாக்காளர்கள்  உள்ளனர். இவர்களுக்கு வேம்படி, வேட்டங்குடி கூழையார் உள்ளிட்ட மூன்று இடங்களில்  மூன்று வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு காலை முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக  நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று மாவட்டத்தில் காலியாக உள்ள குத்தாலம் 15 வார்டு மற்றும் செம்பனார்கோவில் 30 வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், கிராம ஊராட்சியில் காலியாக உள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிகளில் தர்மதானபுரம், திருமுல்லைவாசல், வடிகால், திருவாலி உள்ளிட்ட  5 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் போட்டியின்றி தேர்வான நிலையில், மீதமுள்ள பட்டமங்கலம், பட்டவர்த்தி, திருமங்கலம், பெருஞ்சேரி, பெரம்பூர், கோடி மங்கலம் பெருஞ்சேரி, விளத்திட சமுத்திரம், கொத்தங்குடி, செம்பனார் கோவில் உள்ளிட்ட  10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %