ஸ்ரீமுஷ்ணம் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் திட்டப்பிள்ளை (வயது 55). நரிக்குறவரான இவர் நேற்று முன்தினம் இரவு வெடிமருந்து நிரப்பப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனது மனைவி விஜயாவுடன் மொபட்டில் கல்லுமேடு கிராமத்துக்கு புறப்பட்டார். கண்டியங்குப்பம் மாதா கோவில் அருகே சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 2 பேர், திட்டப்பிள்ளையை வழிமறித்ததோடு, தாங்கள் வனத்துறை அதிகாரிகள் என்றும், அவரிடம் உள்ள துப்பாக்கிக்கு உரிமத்தை காண்பிக்குமாறும் கூறியுள்ளனர். இதை நம்பிய திட்டப்பிள்ளை தான் வைத்திருந்த துப்பாக்கியை தனது மொபட் மீது சாய்த்து வைத்து விட்டு, மொபட் பெட்டியில் இருந்த துப்பாக்கி உரிமத்துக்கான ஆவணத்தை எடுக்க முயன்றார்.
அந்த சமயத்தில் அந்த மர்மநபர்கள் 2 பேரும் நாட்டுத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். அப்போது தான் திட்டப்பிள்ளைக்கு தனது கவனத்தை திசை திருப்பிவிட்டு, மர்மநபர்கள் துப்பாக்கியை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து வனத்துறை அதிகாரிகள் போல் நடித்து, துப்பாக்கியை பறித்து சென்ற மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Time:2 Minute, 27 Second