0 0
Read Time:2 Minute, 2 Second

முந்திரி தொழிற்சாலை கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் சற்று முன் சரணடைந்த கடலூர் திமுக எம்.பி., ரமேஷ், அறிக்கை ஒன்றை தனது லெட்டர் பேடில் அனுப்பியுள்ளார். அதில் தன் மீதான குற்றங்களை சட்டப்படி பொய் என நிரூபித்து வெளியே வருவேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

என்னுடைய முந்திரித் தொழிற்சாலையில் பணிபுரிந்த திரு கோவிந்தராஜ் என்பவரது மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையினை அடிப்படையாக வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதிற்கு நெருடலாகவும் இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையும் அளிக்கிறது.

ஆகவே நான் உயிரினும் போற்றும் என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ள வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %