0 0
Read Time:2 Minute, 33 Second

மயிலாடுதுறையில் நான்கு தலைமுறைகளாக பாரம்பரிய முறையில் கொலு பொம்மைகளை உருவாக்கி வரும் கலைக்குடும்பம், தமது குறுந்தொழிலை விரிவுபடுத்தி, தற்போது உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பி வருகின்றது.

மயிலாடுதுறையில் மூன்று தலைமுறையாக குடிசைதொழிலாக செய்யப்பட்டு வந்த கொலு பொம்மைகள் உற்பத்தி தொழிலை நான்காம் தலைமுறை பட்டதாரி இளைஞரான ஆனந்தகுமார் விரிவுபடுத்தி அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இவர், தான் தயாரிக்கும் கொலு பொம்மைகள், மண் சிற்பங்கள் ஆகியன தமிழகம் மட்டுமின்றி கேரளா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகிறார்.

நவராத்திரியை ஒட்டி இந்தாண்டு இவர் தயாரித்துள்ள விவசாய செட் பொம்மைகள் அமோகமாக விற்பனை ஆகி வருகின்றன. மேலும், கிருஷ்ண பெருமானின் தசாவதாரம் பொம்மைகள், கடவுள், தேசத் தலைவர்கள், விலங்கு, பறவைகளின் பொம்மைகள், உடற்பயிற்சியின் அவசியத்தை பெண்களுக்கு உணர்த்தும் பொம்மைகள் நன்கு விற்பனை ஆகின்றன.

அந்த வகையில் மாவு அரைத்தல், துணி துவைத்தல், அம்மி அரைத்தல், உலக்கை இடித்தல் போன்ற பொம்மைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. மண் பானையில் தொங்கும் மின்விளக்கு போன்ற புதுமையான கொலு பொம்மைகளில் புதுவரவுகள் அமோக விற்பனையாகி வருகிறது.

கடந்த 20 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை ஆகாமல் இருந்த கொலு பொம்மைகள், தற்போது அரசு தளர்வுகளை அறிவித்ததால் விற்பனை சூடு பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %