0 0
Read Time:3 Minute, 1 Second

10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போனது. ஏற்னெவே 10ம் வகுப்பும் மற்றும் 11,12ம் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத் தற்போது திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1-ம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் & பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டமிட்டபடி நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், 10,11,12ம் வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்துவதற்கான வாய்ப்பில்லை. டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

5-ம் வகுப்பு வரை மாணவர்கள் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்து வகுப்புகளில் தொடர்ச்சியாக வகுப்புகளில் அமர்வது என்பது கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கும். எனவே பெற்றோர்கள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில் கூட பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல 10 & 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %