பொறையார் இச்சலடி மிஷன் தெருவில் வசிக்கும் லோகிதாஆரோக்கியதாஸ் அவர்கள் குடிசை மாற்ற வழியில்லாமல் இருப்பதை,அப்பகுதியைச்சார்ந்த, சூவீட்ராஜ் வாயிலாக அறிந்த பேரூராட்சி மு.கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் தனது நண்பர் சுலைமானுடன் சென்று பார்வையிட்டார்…
பின்பு பல்வேறு உதவிகளை செய்து வரும் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்,
மாணிக்க.அருண்குமார், லோகிதாஆரோக்கியதாஸ் அவர்களின் பழுதடைந்த வீட்டை,புகைப்படம் எடுத்து,முகநூலில் பதிவிட்டு தனது நண்பர்களிடம் உதவிகோரினார். அதனை அறிந்த அவரது நண்பர்கள் .சுலைமான், ப.இராம்குமார் கன்சா மரைக்காயர், செ.கலையரசன் தனசேகர், சிங்கப்பூர் நண்பர்கள், உ கிருஷ்ணன் ஆறுபாதி வீரமணி நிர்மலாதேவி அருண்குமார்அவர்களின் நிதி உதவியோடும், பந்தல் கட்டும் பணியை ஏற்ற சுவீட்ராஜ் பிரவீன்,ஆப்ரஹாம், மைக்கேல்ராஜ், தினேஷ்குமார், உத்திராபதி, ரூபன் ஒத்துழைப்போடும் 20000 ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிலை அமைத்துக்கொடுத்தாரமேலும் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை,ஏழை தம்பதிக்கு வழங்கினார்…
இந்த நிகழ்வில் கன்சா மரைக்காயரின் தந்தையார் ஜனாப் K.M தர்பார் மரைக்காயர் கலந்து கொண்டு,புதிய குடிலிற்கான சாவியையும்,மளிகை பொருட்களையும் வழங்கி சிறப்பித்தார்..
இந்த நிகழ்வில் உள்ளூர் பிரமுகர்களும்,பொதுதொழிலாளர் சங்க உறுப்பினர்கள் திரு கோகுல விஷ்வா ,மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உதவியை பெற்றுக்கொண்ட தம்பதியினர் பொதுதொழிலாளர் சங்க செயல்பாட்டையும்,பல உதவிகளை இக்கட்டான நேரத்தில் செய்துவரும் தரங்கை பேரூராட்சி மு.கவுன்சிலர் மாணிக்க.அருண்குமாரையும்,அவருடைய நண்பர்களையும் மனதார பாராட்டினர். இந்த சேவைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் முகநூல் சேவையை பெரிதும் பாராட்டினர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.