0 0
Read Time:4 Minute, 15 Second

தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி இரகங்களை இந்திய முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக அனைவரும் பயன்பெறும் வகையில் விற்பனை செய்து நெசவாளர்கள் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர இரகங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு, நுகர்வோர்க்கும், உற்பத்தியாளர்க்கும் ஓர் தொடர்பை உருவாக்குகிறது.

வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள். கூறைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கி, துண்டு இரகங்கள் , பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிறுவனத்தில் தீபாவளி 2021 சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.125 லட்சமும், சீர்காழி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.60 லட்சமும் ஆக மொத்தம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரூ.185 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம். எனவே பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு உறுதுணையாக திகழ்ந்து, நெசவாளர்களின் தொழில் வளர பக்கபலமாக இருக்க வேண்டும் இரா.லலிதா தெரிவித்தார் என மாவட்ட ஆட்சியர்

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சௌ.சாதிக் அலி, கோ-ஆப்டெக்ஸ் மண்டல இயக்குநர் லெனின், வர்த்தக மேலாளர் (தணிக்கை) கந்தசாமி. விற்பனை நிலைய மேலாளர் எஸ்.முருகன் மற்றும் விற்பனை நிலைய ஊழியர்களும் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %