0 0
Read Time:1 Minute, 28 Second

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உலக கை கழுவுதல் தினம் உறுதிமொழி ஏற்பு இன்று நடைபெற்றது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி ‘கை கழுவுதல் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இப்படி கை கழுவுவதால் பலவகையான நோய் தொற்றுகளை கட்டுப்படுத்தலாம். கொரோனா உள்ளிட்ட நோய்கள் அதன் கிருமிகள் கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலமாக அழிக்கப்படுகின்றன. உள்ளங்கை புறங்கை விரல் இடுக்குகள் நக இடுக்குகள் ஆகியவற்றில் சோப்பு போட்டு எவ்வாறு கை கழுவுவது என்பது குறித்து செயல் விளக்கம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாணவிகள் பங்கேற்று செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் மயிலாடுதுறை சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரதாப் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக இதில் பங்கேற்று உறுதி மொழியேற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %