0 0
Read Time:3 Minute, 28 Second

ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் கேகேஆரை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 192 ரன்களை குவித்தது.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸ் அதிரடியாக அடித்து ஆடி 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 86 ரன்களை குவித்தார். ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்களும், உத்தப்பா 15 பந்தில் 31 ரன்களும், மொயின் அலி 20 பந்தில் 37 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து 193 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய கேகேஆர் அணியின் தொடக்க வீரரும் அந்த அணியின் நட்சத்திர வீரருமான வெங்கடேஷ் ஐயர், ஹேசில்வுட் வீசிய இன்னிங்ஸின் 2வது ஓவரில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ஹேசில்வுட் வீசிய 2வது ஓவரின் 3வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் கொடுத்த கேட்ச்சை அரிதினும் அரிதாக தோனி கோட்டைவிட்டார். அந்த கேட்ச் கொடுத்தபோது வெங்கடேஷ் ஐயர் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்திருந்தார்.

ஆனால் தோனி கேட்ச்சை கோட்டைவிட்ட அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்த வெங்கடேஷ் ஐயர், தொடர்ந்து அடித்து ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய வெங்கடேஷ் ஐயர், 31 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார்.

அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயர் சரியாக 50 ரன்னில் ஷர்துல் தாகூரின் பந்தில் ஆட்டமிழக்க, அதே ஓவரில்(11) நிதிஷ் ராணாவும் டக் அவுட்டானார். சுனில் நரைன் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அரைசதம் அடித்த மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில்லும் 51 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தினேஷ் கார்த்திக்(9), ஷகிப் அல் ஹசன்(0), ராகுல் திரிபாதி(2), மோர்கன்(4) ஆகிய மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவருமே படுமோசமாக சொதப்பி மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.

கடைசியில் டெத் ஓவர்களில் ஷிவம் மாவியும் ஃபெர்குசனும் இணைந்து 41 ரன்களை குவித்தனர். ஆனாலும் கேகேஆர் அணி 20 ஓவரில் 165 ரன்கள் மட்டுமே அடிக்க, 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %