0 0
Read Time:2 Minute, 23 Second

நாகையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் அந்தனப்பேட்டை கிராமம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பழனிவேல் – ராஜலட்சுமி தம்பதி. இவர்கள் நாகை துறைமுகத்தில் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றிவரும் நிலையில், இன்று (19.10.2021) காலை சமைப்பதற்கு ராஜலட்சுமி தயாராகியுள்ளார். நண்டு சமைப்பதற்காக அதனை சுத்தம் செய்ய கொல்லைப்புறத்திற்குச் சென்றுள்ளார் ராஜலட்சுமி. அப்போது அங்கு அறுந்து விழுந்துகிடந்த உயர் மின்னழுத்த கம்பியை ராஜலட்சுமி மிதித்துள்ளார். மின்சாரம் பாய்ந்த நிலையில் அவர் துடிதுடிக்க, கணவர் பழனிவேல் பதறியடித்து ஓடிவந்து மனைவியைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது மின்கம்பியைக் கையால் தூக்கி எறிய பழனிவேல் முற்பட்ட நிலையில் அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் அரவணைத்த நிலையிலேயே உயிரிழந்தனர்.

nagai electricity incident... police investigation

சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாகை நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் தஞ்சை ஒரத்தநாட்டில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் வயல் சேற்றில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்த நிலையில், மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நாகையில் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %