0 0
Read Time:3 Minute, 8 Second

நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் நகராட்சி அதனை சுற்றியுள்ள வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் 13 கிராமங்களை உள்ளடக்கி நாகப்பட்டினம் கூட்டு உள்ளுர் திட்டப் பகுதியாக நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 10(1)-ன் கீழ் பார்வை 1-ல் சுட்டிய அரசாணை மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு, நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 10(4)-ன் கீழ் உறுதி செய்து பார்வை 3-ல் சுட்டிய அரசாணை மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணி கூட்டு உள்ளுர் திட்டக் குழுமப் பகுதியின் பரப்பு 80.08 ச.கிமீ ஆகும். பார்வை 4-ல் காணும் அரசாணையில் நாகப்பட்டினம் கூட்டு உள்ளூர் திட்டப் பகுதிக்கான முழுமைத் திட்டம் AMRUT திட்டத்தின் கீழ் GiS Based Master Plan தயாரிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில், Department of Planning துறைக்கு நிர்ணயம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணி உள்ளூர் திட்ட பகுதியாக நகர் ஊரமைப்பு சட்டப்படி அறிவிப்பு செய்து அரசாணை பெறப்பட்டு மேற்படி முழுமைத் திட்டம் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக், அண்ணா யுனிவர்சிட்டியால் தயாரிக்கப்பட்டு, மேற்படி திட்டம் சம்பந்தமாக அண்ணா யுனிவர்சிட்டி ப்ரொபசர் டாக்டர் பிரதீப் மோசஸ் காணொலி காட்சி விளக்கப் படம் மூலம் ஆலோசனைகள், ஆட்சேபனைகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணி கூட்டு உள்ளூர் திட்டக் குழும முழுமைத் திட்டம் தொடர்பாக அரசுத்துறை சார்ந்த கருத்துக்களை நாகப்பட்டினம் நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். பொதுமக்கள் சார்பாக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் மற்றும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்குதாரர்கள், உள்ளுர் வல்லுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %