உளுந்தானது கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உடல் உறிஞ்ச உதவுகின்றன.
செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுப்பொருட்களை கழிவாக மாற்றி வெளியேற்றவும் இவை உதவுகின்றன. எனவே உளுந்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம்.
செரிமான பிரச்சனை இருப்பவர்கள் உளுந்து வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றி தள்ளும். இதனால் செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும்.
மெலிந்த உடல் உடையவர்கள் நன்கு வலுப்பெற, உடம்பில் இருக்கும் எலும்புகள், தசைகள், நரம்புகள் அத்தனையும் ஊட்டச்சத்து பெற்று நன்கு வளர அடிக்கடி உங்களுடைய உணவு பட்டியலில் உளுந்து கஞ்சி அல்லது களியாக செய்து உட்கொண்டு வரலாம்.
உடலில் இருக்கும் சூட்டினை தகர்த்து எறிய உடல் குளிர்ச்சி பெற உளுந்துடன் சேர்த்து தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு மற்றும் வெந்தயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து களியாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் தேவை. பெண்கள் கட்டாயம் அடிக்கடி உணவில் உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நலம் தரும்.
இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுபெற அடிக்கடி உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். எலும்புகளுக்கு பலமும் எலும்பு மற்றும் தசை முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வை கொடுக்கும்.