0 0
Read Time:5 Minute, 18 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற சிறப்பு வாடிக்கையாளர் தொடர்பு திட்ட முகாமில் ரூ.40 கோடி மதிப்பிலான கடனுதவியை 500 பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது…

சிறப்பு வாடிக்கையாளர் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் சார்பில் தொழில்கடன். கல்விக்கடன், தாட்கோ கடன், சுயஉதவிக்குழு கடன், வீட்டு கடன், வாகனக் கடன், விவசாயக் கடன் போன்ற கடனுதவிகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

அரசின் கடனுதவி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக இருப்பது வங்கிகள் மட்டுமே. அந்தவகையில் தற்போது இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதற்கான அரசின் திட்டங்களை சமூகவலைதளங்கள் மூலம் விளம்பர படுத்தினால். இந்த கால இளைஞர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும். மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவைகள் இளைஞர்கள் சுயதொழில் செய்வதற்கான வழிகாட்டுமுறைகளை விளம்பரப்படுத்த வேண்டும்.

மேலும் வங்கிகள் மூலம் பெறப்படும் கடனுதவிகளை பெறுபவர்கள், முறையாக செலுத்தி, தொடர்ந்து வங்கி பரிவத்தனைகளை மேற்கொண்டு, தங்களது தொழில் வளர்ச்சியை பெருக்கிக்கொள்ள வேண்டும். பொதுத்துறை வங்கிகள் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் முதன்மையாக திகழ்கிறது

இன்றையதினம் ரூ.40 கோடி மதிப்பிலான கடனுதவிகளை சுமார் 500 பயனாளிகளுக்கு வழங்கும் பணி தொடங்கப்பட்டடுள்ளது. மக்கள் அரசின் திட்டங்களை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்தார்.

முன்னதாக கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா அவர்கள் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இந்தியன் வங்கி திருக்களாச்சேரி கிளையில் அகில இந்திய அளவில் அடல் பென்ஷன் திட்டத்தின், 1000க்கும் மேற்பட்ட பயனாளிகளை இணைத்தமைக்காகவும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பூம்பகார் கிளை அரசின் கடன் திட்டங்களை மக்களிடம் சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும், இந்தியன் வங்கி சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் கிளையின் மூலம் அப்பகுதிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சிறப்பாக செயல்படுத்தியமைக்காகவும் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வங்கி மேலாளர் மற்றும் வர்த்தக மேலாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் 22 கிளைகள் சார்பில் தொழில்கடன், கல்விக்கடன், தாட்கோ கடன், சுயஉதவிக்குழு கடன், வீட்டு கடன், வாகனக் கடன். விவசாயக் கடன் என 500 பயனாளிகளுக்கு மொத்தம் 40 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் ஸ்ரீ.பி.சுரேஷ், பார்த ஸ்டேட் வங்கியின் நாகப்பட்டினம் மண்டல மேலாளர் பிரபாகரன், முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கமலக்கண்ணன், நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் பிரபாகரன், மகளிர் திட்ட இயக்குநர் கவிதாபிரியா, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலர் அறிவழகன், மாவட்ட நிதிசார் கல்வி ஆலோசகர் ஸ்ரீநிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %