0 0
Read Time:1 Minute, 49 Second

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இந்த  சுற்றுலா மையம் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. அழகு கொஞ்சும் இங்குள்ள சதுப்பு நிலக்காடுகளில் ஏராளமான கிளை காடுகளும் உள்ளன. இந்த காடுகளில் உள்ள சுரபுன்னை மரங்கள் மருத்துவ குணம் கொண்டதாகும். இந்த காடுகளை பார்த்து ரசிப்பதற்காக தினந்தோறும்  உள்ளூர் மட்டும் இன்றி வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாட்டை சேர்ந்த பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்தில் குவிந்தனர். 

அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து உற்சாகமாக படகு சவாரி செய்து சதுப்பு நிலக்காடுகளை பார்த்து ரசித்தனர். அப்போது பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் சுற்றுலா மையத்தில் உள்ள குடில்களில் அமர்ந்து குடும்பத்தினருடன் சாப்பிட்டு பொழுதை போக்கினர்.  சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பையொட்டி சுற்றுலா மைய மேலாளர் தினேஷ்குமார் தலைமையிலான ஊழியர்கள், பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %