நாகப்பட்டினம் மாவட்ட மின் பகிர்மான வட்டம் சீர்காழி கோட்டம், கிடாரங்கொண்டான் ஊராட்சியில் 110/11 கி.வோ.துணைமின் நிலையம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேத முருகன் 1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 10MVA திறன் மின்மாற்றி ரிப்பன் கத்தரித்து மின்சார இயந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 15 ஊராட்சி கிராமம் பயன்பெறும் வகையில் சுமார் 15,000 நுகர்வோர் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1200 விவசாய மின் இணைப்புகளும் 600 வணிக மின் இணைப்புகளும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறன் மின்மாற்றி அமைக்கப்படுவதன் மூலம் தடையற்ற மின்சாரம் மற்றும் குறைந்த மின் அழுத்தம் சரிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர் நக்கீரன், நாகை பொது பொறியாளர் நவநீதகிருஷ்ணன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வெண்ணிலா தென்னரசன், சீர்காழி செயற்பொறியாளர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப், இளநிலை பொறியாளர் வனிதா, ஒன்றிய குழு உறுப்பினர் மோகன்தாஸ், மற்றும் சீர்காழி கோட்ட பொறியாளர்கள், பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.