மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குடபட்ட மேமாத்தூர், கீழமாத்தூர், கூடலூர், ஈச்சங்குடி நரசிங்கநத்தம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை வகித்தார், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை, ஒன்றிய ஆணையர் மஞ்சுளா வரவேற்றுப் பேசினார்.
முகாமில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான மக்களிடம் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, பசுமை வீடு, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை வேண்டி 500 -க்கும் மேற்பட்ட மக்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என்று பேசினார்.
இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல்மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நல்லமுத்து, ஆர்த்தி, ஜனகர், அனைத்து துறை அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.