0 0
Read Time:1 Minute, 27 Second

கடலூர் மாவட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் 9 சட்டப் பேரவை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் 21,46,960 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 10,56,480 பேர், பெண்கள் 10,90,235 பேர், இதரர் 245 பேர்களாவர்.

சட்டப் பேரவை தொகுதி வாரியாக: திட்டக்குடி (தனி)- 2,19,038 விருத்தாசலம்- 2,52,342 நெய்வேலி – 2,18,823 பண்ருட்டி- 2,46,165 கடலூர்- 2,40,311 குறிஞ்சிப்பாடி -2,43,241 புவனகிரி- 2,48,988 சிதம்பரம்- 2,49,884 காட்டுமன்னார்கோயில் (தனி)- 2,28,168. இதனை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி வரையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தலுக்கான மனுக்களை அந்தந்த வாக்குச் சாவடியில் அளிக்கலாம். நவ.13, 14 மற்றும் 27,28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %