0 0
Read Time:5 Minute, 1 Second

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி செல்வி என்பவருக்கு குமுதா என்ற பெண்ணும், இரண்டாவது மனைவி மலர் என்பவருக்கு மூன்று பெண் பிள்ளைகளும், வேல்முகன் (27) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெரியசாமி இறந்துவிட்ட நிலையில், பெரியாசாமியின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த வேல்முருகனுக்கும், முதல் மனைவிக்குப் பிறந்த குமுதாவின் மகளான பவித்ராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. வெளிநாட்டில் வேலை செய்துவந்த வேல்முருகன், கடந்த வருடம் தனது சொந்த ஊரான கழுதூர் வந்தவர், பெரியசாமியின் முதல் தாரத்திற்குப் பிறந்த குமுதாவின் சம்மதத்துடன், அவரது மகள் பவித்ராவை கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டார். உறவு முறைப்படி அக்கா மகளான பவித்ராவை திருமணம் செய்துகொண்டார். 

திருமணம் முடிந்து வேப்பூரில் இருவரும் வசித்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பவித்ரா, கழுதூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். இதனிடையே தனது மனைவியைப் பார்ப்பதற்காக வேல்முருகன் கடந்த 28ஆம் தேதி வேப்பூரிலிருந்து கழுதூர் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அன்று இரவு 11.30 மணியளவில் வேல்முருகனின் தாயார் மலர்க்கொடிக்கு தொலைப்பேசி வாயிலாக வேல்முருகன் இறந்துவிட்டதாகவும், அவரது உடலை வேப்பூர் மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள், மருத்துவமனைக்குச் சென்று பார்த்துக் கதறி அழுதனர். அப்போது வேல்முருகனின் உடலில் ஆங்காங்கே குங்குமம் பூசி இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள், ‘வேல்முருகனை அடித்துக் கொன்றுவிட்டு அதனை மறைப்பதற்காக முகம் மற்றும் மார்பு பகுதிகளில் நெற்றியில் வைக்கப்படும் குங்குமத்தைப் பூசியுள்ளதாகவும், உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் கூறி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

பிரேதப் பரிசோதனையில் வேல்முருகன், கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து திட்டக்குடி டி.எஸ்.பி. சிவா ஆலோசனையின் பேரில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் சந்திரா ஆகியோர் வேல்முருகன் மனைவி பவித்ரா, மாமியார் குமுதா ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை செய்தனர்.

woman arrested by police in cuddalore on youth case

அப்போது மாமியார் குமுதா அளித்த வாக்குமூலத்தில், “மருமகன் வேல்முருகனுக்கும், எனக்கும் தொடர்பு இருந்துவந்தது. சம்பவத்தன்று மதுபோதையில் வந்து உறவுகொள்ள அழைத்தார். மகள் பவித்ரா பக்கத்து அறையில் படுத்திருப்பதால் வேண்டாமென தடுத்தேன். ஆனால், அதையும் மீறி மருமகன் வற்புறுத்தியதால் கழுத்தில் கை வைத்து அழுத்தி தள்ளியதில் இறந்துவிட்டார். பின்னர் புடவை துணியை அவர் கழுத்தில் கட்டி தூக்கில் மாட்டிவிட்டு, தூங்கிய மகளை எழுப்பி, ‘உன் கணவர் தூக்குமாட்டி தொங்குகிறார்’ என கூறினேன்” என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து வேப்பூர் போலீசார் மருமகனை கொலை செய்த மாமியார் குமுதாவை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %