மயிலாடுதுறை மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லீதா நேரில் பார்வையிட்டு கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, பள்ளிக்கு வருகை தந்த மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவத்ததாவது.
தமிழக அரசின் உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 843 பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை திறக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி நுழைவுவாயிலில் வெப்பபரிசோதனை இயந்திரம் மூலம் உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மாணவ, மாணவிகள் கிருமி நாசினி மூலம் கைகளை கத்தப்படுத்திக்கொள்ள வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 843 பள்ளிகளில் 1,04411 மாணவ,மாணவிகள் 1 ஆம் வருப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை கல்வி பயில்கிறார்கள். இவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் அமர்ந்து கல்வி கற்கின்ற வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் முதல் நாள் பள்ளிக்கு வருகைதந்த அனுபவம் குறிந்து கலந்துரையாடினார். தொடர்ந்து பள்ளிகளில் மின்விளக்கு, குடிநீர், கழிவறை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இவ்ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.