0 0
Read Time:3 Minute, 3 Second

சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வேதிப்பொருள்களும் வைட்டமின்களும் அளவிட கம்பில் அதிக புரத சத்துக்கள் உள்ளது. வெள்ளை அரிசிகளை 8 மடங்கு இரும்பு சத்து காம்பில் உள்ளது.

கம்பை கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது மற்றும் தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுத்து பலத்தைக் கொடுக்கும்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமாக இருக்கிற அரிசி சத்தத்தை சாப்பிட முடியாது அவர்கள் கம்பை கூழ் களி மற்றும் தோசை செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் மற்றும் உடல் ஆரோக்கிமாகும்.

கம்பு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

கம்பில் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்டு இருப்பதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்றில் புண்கள் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சில காலம் கம்பு சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீங்கிவிடும். அதிக எடை உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை குறைத்து சரியான நேரத்தில் பசி எடுக்க வைக்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் சில சமயங்களில் அதிக இரத்த போக்கும் அடி வயிற்று வலியும் வரும். இந்த நேரத்தில் இளஞ்சூடான கம்பு கூழ் குடித்து வந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் தீரும்.

கம்பு இரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலை முடி உதிர்வில் இருந்து விடுபடலாம்.

கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைக்கிறது. இரத்த சோகை உள்ளவர்கள் வாரத்திற்கு 2 நாள் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %