0 0
Read Time:3 Minute, 3 Second

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 99 மி.மீ.  மழை பெய்துள்ளது. இதேபோல நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-சீர்காழியில் 61, தரங்கம்பாடி 38, மயிலாடுதுறை 32, மணல்மேட்டில் 29. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று கூறைநாடு பகுதியில் இருந்த பழைய போலீஸ் நிலையம் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை. தொடர் மழையால் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.இந்தநிலையில் வட கிழக்கு பருவமழை காரணமாக மயிலாடுதுறையில் பெய்து வரும் தொடர் மழையால் நேற்று காலை பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருந்த சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. எனவே உடனடியாக பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு போலீஸ்துறை பயன்படுத்தும் வகையில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று போலீசாரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குத்தாலத்தில் வீடு இடிந்ததுகுத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு சிலம்பாக்கம் தேரடி பகுதியை சேர்ந்தவர் நயினாசெட்டி (வயது 54). விவசாயியான இவருக்கு சொந்தமான ஓட்டு வீடு இருந்தது. குத்தாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிந்து விழுந்த சுவற்றை பார்வையிட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %