0 0
Read Time:1 Minute, 55 Second

தீபாவளியையொட்டி, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,900 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவரது சாா்பில் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு : தஞ்சை சரகத்துக்குள்பட்ட நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையைப் பாதுகாப்புடன், சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்துக் கடைவீதிகள், பேருந்து நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடுமிடங்களில் காவல் துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய பகுதிகளில் உயா்கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. சமூக விரோதிகளால் பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கண்காணித்துத் தடுக்க காவல் துறையினரைக் கொண்டு சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் 385 போலீஸாரும், திருவாரூா் மாவட்டத்தில் 1,136 போலீஸாரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 407 போலீஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %