0 0
Read Time:6 Minute, 20 Second

எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம்.

பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு.

பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து, பின் அதை, அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.

உடலுக்கு குளிர்ச்சித் தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கிறது. பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும்.

சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

வெயிலில் காயவைத்த‍ பனங்கிழங்கை (ப‌ச்சையாக) எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவாக அரைத்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியுள்ள‍ அல்ல‍து உடலிலிருந்து வெளியேர மறுக்கும் மலத்தை இளகவைத்து, எளிதான மலத்தை வெளியேற்றும்.

பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதைக் குணமாக்கும்.
பனங்கிழங்கில் பித்தம் சற்று அதிகமாக இருப்பதால், இதைச் சாப்பிட்டப் பின் சிறிது மிளகு மற்றும் பூண்டுகளை கலந்து சாப்பிட்டு விட்டால் பித்தம் சரியாகிவிடும்.
பனங் கிழங்கை தண்ணீர் விட்டு அவித்து பின்னர் மாவாக்கிப் புட்டு, கூழ் உள்ளிட்ட உணவு வகைகளைச் செய்யலாம்.மேலும் அவித்த கிழங்கை வெயிலில் உலர்த்திப் பெறப்படும் பொருளை புழுக்கொடியல் என்று கிராமப்புறங்களில் பயன்படுத்துகிறார்கள்.
இந்தப் புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம். இது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கக் கூடியதாகும்.
பனங்கிழங்கை அவித்து காய வைத்து, பொடித்து, அதில் சர்க்கரை மற்றும் தேங்காய் சேர்த்து சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும். இந்தக் கிழங்கை அவித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு அரைத்து துவையலாகவும்  உண்ணலாம்.
பனங்கிழங்கு குளிர்ச்சியைத் தரவல்லது. மேலும் குளிர் காலத்தில் உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவும் கிழங்கு இது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் ஆற்றலும் பனங்கிழங்கில் உள்ளது.
பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து  கிடைக்கும்.
பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும்.
பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங் கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.
பனங்கிழங்கில் நார்சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும் போது,  விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.
வயிறு மற்றும் சிறுநீரக பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %