கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி சமூக சேவை மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கும் ஆர்வலருக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.சிதம்பரத்தை சேர்ந்த சமூக சேவகர் பாலாஜி அவர்களுக்கு 20 வருடங்களாக சமூக சேவை செய்து வருவதை பாராட்டி அப்துல்கலாம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பூவராக மூர்த்தி தலைமை தாங்கினார் அறக்கட்டளை நிறுவனர் ஜெயராஜ் ராஜேந்திரன் மாநில துணைத் தலைவர் வின்சென்ட் ராஜேந்திரன் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் வி.ப்பி ஜெகதீஸ்வரன்மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா ஆகியோர் கலந்து கொண்டு விருது வழங்கினார்கள்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.