விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(8.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ,விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை ,திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாமக்கல், வேலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!.
தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரமாக தீவிர மழை பெய்து வருகிறது. முக்கியமாக கடந்த 48 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து கொண்டு இருக்கிறது.
அறிவிப்பு:
வங்கக்கடலில் தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு போக இன்னொரு தாழ்வு பகுதி நாளை அல்லது நாளை மறுநாள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தீவிர கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை:
தமிழ்நாட்டில் நேற்று முதல் நாள் மாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது.
தீவிர கனமழை:
மயிலாடுதுறை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இன்றும் பெய்யும்:
இந்த மாவட்டங்களில் இன்றும் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது . இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.