0 0
Read Time:3 Minute, 49 Second

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. குடியிருப்பு பகுதி களை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையால் குளம், குட்டைகள், ஆறு, ஏரிகள் நிரம்பி வருகின்றன. மேலும் நேற்று முதல் சென்னையில் பெய்த மழையால் சென்னையின் பெரும்பாலன முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. இந்நிலையில் தற்பொழுது விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் மேலும், கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கடலூரில் தொடர் மழையால் நகர் பகுதிகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி

இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் தீபாவளிக்கு பிறகு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இதனால் மாவட்டத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பிவிட்டன மீதம் உள்ள ஏரிகளும் தொடர்ந்து நிரம்பி வருகின்றது, மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்பொழுது வரை பெய்து வரும் தொடர் மழையால் கடலூரில் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடலூர் பேருந்து நிலையம் நுழைவு வாயில், மேலும் பல குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடலூரில் தொடர் மழையால் நகர் பகுதிகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி

குறிப்பாக கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியில் உள்ள MGK நகர், ஆனந்த் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து தனி தீவு போல் காட்சியளிக்கின்றன.  தங்கள் பகுதிகளில் கடந்த பல வருடங்களாக மழை காலங்களில் இவ்வாறு மழை நீர் தேங்கி நின்று பெரும் அவதிக்கு உள்ளாகி வருவது வழக்கம் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டால் தங்களுக்கு தற்காலிகமாக நீர் வெளியேற்றப்படும் ஆனால் மீண்டும் அடுத்த மழைக்கு தண்ணீர் தேங்கி விடும், மேலும் தற்பொழுது தான் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இனி வரும் காலங்களில் மேலும் மழை அதிகமாக தான் பெய்யும் என்பதால் தங்களுக்கு நிரந்தர தீர்வாக வடிகால் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 752.30 மி.மீ மழை பொழிந்து உள்ளது. இதில் அதிகபட்சமாக புதுபெட்டையில் 90.9 மி.மீ மழையும் கடலூரில் 63.2 மி.மீ மழையும் பெய்துள்ளது குறைந்தபட்சமாக தொழுதூறில் 5 மி.மீ மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %