சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
புயலாக மாறுமா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. என்றும் கூறினார்.மேலும், தமிழ்நாட்டில் உள்ள 4 ரேடார்களும் நல்ல முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், “டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும்” என்றார்.