0 0
Read Time:2 Minute, 54 Second

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், ஆறுபாதி ஊராட்சி, ஈஸ்வரன் கோயில் தெருவில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் மழையால் பாதிக்கப்பட்ட வீடு மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களைத் தவிர வேறு முகாம்கள் அமைக்கப்படவில்லை உடனே போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பழமை வாய்ந்த கூரை வீடுகள் மற்றும் தொகுப்பு வீடுகளை கணக்கெடுத்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதியை பார்த்த அமைச்சர் உடனே ஜேசிபி இயந்திரம் மற்றும் மழைநீரை அகற்றுவதற்கு இயந்திரங்களையும் வரவழைக்கப்பட்டு மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் நீரை அகற்றும் பணிகளை ஏற்பாடு செய்தவர் மேலும் தண்ணீர் சூழ்ந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றுவதற்கு அரசு சார்பில் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வின்போது நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஞானவேலன், செம்பை ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், ஒன்றிய குழு உறுப்பினர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %