0 0
Read Time:4 Minute, 17 Second

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சாிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தில் உதவி தலைவர், இணை தலைவர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் என்பது தமிழக அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாகும். பெரிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உள்ளடக்கிய பெரிய தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு TIDCO உதவுகிறது. சென்னை, பெங்களுரு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களில் தொழில்துறை தாழ்வாரத்திட்டங்களின் வளர்ச்சிக்கான நோடல் ஏஜென்சி உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த தொழில் வளர்ச்சிக்கழகத்தில் உதவி தலைவர், இணை தலைவர் மற்றும் உதவியாளர் பணி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கான தகுதி, சம்பள விபரம், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே அறிந்துக்கொள்ளலாம்.

தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக்கழகத்தில் பணிபுரிவதற்கானத் தகுதிகள்:

உதவி தலைவர்க்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 5

.கல்வித்தகுதி : Bachelor of Pharmacy or; Science/ Engineering/ Technology in Biotechnology/ Bioinformatics/ Nanotechnology/ Electrical/ Mechanical/ or similar core engineering படித்திருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் பணி முன் அனுபவ அவசியம்.

வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இணைத்தலைவர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் : 6

கல்வித்தகுதி: Bachelor of Pharmacy or; Science/ Engineering/ Technology in Biotechnology/ Bioinformatics/ Nanotechnology/ Electrical/ Mechanical/ or similar core engineering படித்திருக்க வேண்டும்.

மேலும் 10 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் : 6

கல்வித்தகுதி : Bachelor of Pharmacy or; Science/ Engineering/ Technology in Biotechnology/ Bioinformatics/ Nanotechnology/ Electrical/ Mechanical/ or similar core engineering படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் உள்ள நபர்கள், https://careers.tidco.com/ என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தை டவுன்லோடு செய்து நாளைக்குள் அதாவது நவமபர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சாிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://careers.tidco.com/doc/Detailed%20Notification%20Sector%20Experts.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

நன்றி -ABP

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %