0 0
Read Time:1 Minute, 22 Second

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்;பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மாடு, குதிரை போன்ற கால்நடைகளால் போக்குவரத்து கடும் இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கால்நடை உரிமையாளர்கள் கேட்பதாக இல்லை.

இதையடுத்து, நாளை முதல் மாடு, குதிரை போன்ற வீடுகளில் கட்டிவைத்து பராமரிக்காமல், சாலைகளில் அவிழ்த்துவிடப்படும் கால்நடைகள் கோசாலைகளில் அடைக்கப்படும். அவ்வாறு கால்நடைகளை அவிழ்த்துவிடும் கால்நடை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முதல் சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கும் என நகராட்சி ஆணையர் பாலு தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %