0 0
Read Time:7 Minute, 57 Second

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் நீர்ச்சத்து இருப்பதால், கலோரிகள் குறைவு. உடல் எடை குறைப்போருக்கு ஏற்றது.

வைட்டமின் ஏ,பி,சி, தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன. படபடப்பு உணர்வு குறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. மார்பகம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

மஞ்சள்காமாலை, கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகளைச் சரிசெய்யும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல் பிரச்னைகளைச் சரியாக்கும். செரிமான சக்தியை மேம்படுத்தும். இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையைச் சரிசெய்யும்.

சரும வறட்சி, சருமப் பிரச்னைகள் தீரும். அசிடிட்டி, அல்சர், ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு. வைட்டமின் சி, பி, ஏ, புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.

குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.

நமக்கு ஏற்படும் அஜீரண கோளாறுகளை நீக்கி, நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் ஜீரணமாக்குவதுடன், நல்ல பசியையும் தூண்டச் செய்கிறது.

புடலங்காயை தினமும் நாம் உணவில் சேர்த்து வந்தால், குடல் புண், வயிற்று புண், தொண்டை புண் போன்ற பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடச் செய்கிறது.

புடலங்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், மலசிக்கல் பிரச்சனைகள் வராது.

மூல நோய் உள்ளவர்கள், தினமும் புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது நரம்புகளுக்கு புத்துணர்வுகளை அளித்து, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்தி, கருப்பைக் கோளாறுகள் தொடர்பான பிரச்சனைகளியும் சரி செய்கிறது. மேலும் இது கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.

புடலங்காயில் நீர்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றி, வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.

காய்ச்சலை குறைகிறது :

புடலங்காய் கஷாயம் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.

ஒரே இரவில், காய்ச்சல்கள் குறைந்து குணமாகும் என்று சொல்லப்படுகிறது

நச்சுத்தன்மை நீக்குகிறது :
புடலங்காய் பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு டையூரிடிக் மருந்தாக பயன் படுத்தப்படுகிறது ஏனெனில் இது கல்லீரலை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.

சிறுநீரை பெருக்குவதன் மூலம் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப் படுவதை துரிதப் படுத்துகிறது.

வறட்சி மற்றும் நீரிழப்பை குறைத்து சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பையின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

செரிமான கோளாறுகளுக்கு நல்லது :

செரிமான கோளாறு உடையவர்களுக்கு லேசான மலமிளக்கியாக செயல்படுகிறது.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடல் கோளாறுகள், தசைப்பிடிப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சும் செயல்முறையை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

சில ஆராய்ச்சிகளில் புடலங்காயில் ஆண்டிபயாடிக் பண்புகள் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளன.

மேலும் புடலங்காயில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் கரோட்டின் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் இணைந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்து கின்றன.

புடலங்காய் சைனஸ் மற்றும் சுவாசக் குழாய்களில் சீழ் மற்றும் கபத்தை தளர்த்துகிறது.

இது நோயெதிர்ப்பு அமைப்புக்கு மேலும் நன்மை பயக்கிறது.

எலும்பு ஆரோக்கியம் :

புடலங்காயில் கால்சியம் இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

கால்சியம் பற்றாக்குறை ஆஸ்டியோ போரோசிஸ், ஆஸ்டியோபீனியா மற்றும் ஹைபோகால்சீமியா போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

இதில் உள்ள வைட்டமின் டி உடலில் கால்சியம் உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது. மேலும் கால்சியம் வயதாகும்போது எழும்பி ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் அவசியமாகும்.

உடல் எடையை குறைக்கிறது :

புடலங்காயில் கலோரிகள் குறைந்த அளவில் உள்ளது. மேலும் பூஜ்ய அளவு கொழுப்பு இல்லை.

இது நீர்ச் சத்து மற்றும் நார்ச்சத்துடன் முக்கியமான ஊட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் எடை குறைப்பு உதவுகிறது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

கூந்தல் பராமரிப்பு :

புடலங்காய் அலோபீசியாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புதிய முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

மேலும் மயிர்க் கால்களைப் பலப்படுத்தி முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.

மேலும் அதில் உள்ள அதிக அளவு கரோட்டின் தோல் மற்றும் முடியை பராமரிக்க உதவுகிறது.

புடலங்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது பொடுகை கட்டுப்படுத்துவதாக சொல்லப் படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %