0 0
Read Time:2 Minute, 3 Second

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டு பகுதியில் மரங்கள் உள்ளன. அங்கு நேற்று ஒரு மூதாட்டி சென்றுள்ளார். கொள்ளிடம் ஆற்றில் நடுவே இருந்த திட்டைசுற்றி தண்ணீர் சூழ்ந்து விட்டதால் அவரால் வெளியே வர முடியவில்லை. இந்தநிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மாதிரவேளூர் இளைஞர்கள்  அந்த மணல் திட்டு பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அந்த மூதாட்டியை ஒரு கட்டிலில் படுக்க வைத்து தூக்கி வந்து, ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாதிரவேளூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர் கொள்ளிடம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.   அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் மாதிரவேளூர் கிராமத்தி்ற்கு விரைந்து வந்து மூதாட்டியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், மூதாட்டி பண்ருட்டி பகுதி கொட்டாம்பளையம் கிராமத்தை சேர்ந்த பட்டாபி மனைவி கமலா (வயது 65) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி இந்த பகுதியில் இருந்தது தெரிய வந்தது. பின்னர் மூதாட்டி கமலாவை சீர்காழியில் உள்ள முதியோர் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %