0 0
Read Time:2 Minute, 0 Second

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மாவீரன் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அதன் நிறுவன தலைவர் வி.ஜி.கே.மணிகண்டன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சந்துரு முன்னிலை வகித்தார். நகர செயலாளர் இளையராஜா வரவேற்று பேசினார். இதில் வன்னியர் சத்தியர் சாம்ராஜ்ஜியம் அமைப்பின் நிறுவன தலைவர் சி.ஆர்.ராஜன், ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய பங்கீடு கிடைக்கும் வகையில் வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், ரத்து செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்திட சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் மாநில இளைஞரணி செயலாளர் கோமல் மாரியப்பன், மாநில பொருளாளர் சுதாகரன், மாவட்ட செயலாளர்கள் கடலூர் செல்வம், திருவாரூர் பாபு, நெய்தவாசல் சங்கர், ஒன்றிய தலைவர்கள் விஜய், ரவிச்சந்திரன், சாந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் மணி நேதாஜி நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %