0 0
Read Time:6 Minute, 30 Second

மயிலாடுதுறை நல்லத்துக்குடி ரேஷன் கடையில் நுகர் பொருள் வாணிப கழக மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் திடீர் ஆய்வு!. ஒரு வாரத்திற்குள் கடையை சீரமைத்துப் புதுப்பித்து மரம் நட முடிவு!!

மயிலாடுதுறை நல்லத்துக்குடி ரேஷன் கடைகளில் நுகர் பொருள் வாணிப கழக மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் கடையில் உணவுப்பொருட்களின் தரம்,எடை குறித்து மயிலாடுதுறை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்புக் குழு உறுப்பினர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் ஆய்வினை மேற்கொண்டார். மயிலாடுதுறை ஒன்றியம் நல்லத்துக்குடி கூட்டுறவு அங்காடி எண் டிபிஒ 44 கடையில் ஆய்வு மேற்கொண்டார்.அக்கடைகளின் விற்பனயாளர் கவிதா, வரவேற்று பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகின்ற அரிசி, பருப்பு, சர்க்கரை,எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை காண்பித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்பொழுது பொருள்கள் உற்பத்தி தேதி, காலாவதியான தேதிகள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டது. ஆய்வுக்கு பின் அ.அப்பர்சுந்தரம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழகத்திலுள்ள 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் குறிப்பாக அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை எந்தவித குறையும் இல்லாமல் கொடுக்கப்பட வேண்டும் என்று உறுதிபூண்டு செய்யப்பட வேண்டும் என்பதனடிப்படையில் மாவட்டம்தோறும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வு மயிலாடுதுறை ஒன்றியம் நல்லத்துக்குடி கூட்டுறவு அங்காடியில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உணவு இல்லாமல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் இலவச அரிசித் திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. அப்படி கொடுக்கின்ற அரிசி நன்றாக இருக்க வேண்டும் என்பதை அரசு கவனமாக கையாளுகின்றது. தற்போது உள்ள சின்ன சின்ன குறைகள் நீக்கப்பட்டு நல்ல அரிசி கொடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ரயில்கள் வாயிலாக வருகின்ற அரிசி தற்சமயம் மோட்டா ரகம் என்று கூறப்படுகின்ற குண்டு அரிசி கொடுக்கப்படுவதால் அதனை வாங்கும் பொது மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேகவைத்து உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பரவலான இந்த குறைபாடு நீக்கப்படுவதற்கு எதிர்காலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொருத்தவரை சாதாரண சன்னரக அரிசியை கொடுக்கின்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடுகூட முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் மத்திய உணவுத் துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு குண்டு அரிசி வேண்டாம் சாதாரண அரிசியை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.அதனால் நிச்சயமாக வரும் காலங்களில் நல்ல அரிசி கொடுக்கப்படும் என்னும் நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வின் பொழுது பெண்களிடம் குறைகள் இருக்கிறதா என்று கேட்ட பொழுது இந்த கடை சிறப்பாக செயல்படுவதாகவும் அனைவருக்கும் கேட்கின்ற பொருட்களை உரிய நேரத்தில் வழங்குவதாகவும், எடை குறைவு போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்கள்,,, நல்லத்துக்குடி கூட்டுறவு அங்காடியில் உடைந்து உள்ள படிகள், சிறுசிறு உடைப்புக்கள் இன்னும் ஒரு வாரத்தில் ஊராட்சி பொதுமக்களின் பங்களிப்போடு புதுப்பிக்கப்பட்டு கட்டிடத்திற்கு வண்ணம் தீட்டப்பட்டு, இதுவரை பாராமரிக்கப்படாமலும் விபரங்கள் எழுதப்படாத தகவல் பலகையும் புதிதாக உருவாக்கப்படும். மேலும் நிழல் தரும் மரங்கள் நட்டு பராமரிக்கப்பட் டு நல்லசூழல் உருவாக்கப்படும்.

மேலும் அனைத்து விற்பனையாளர்களுக்கும் பண்புப் பயிற்சி முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அ,அப்பர்சுந்தரம் தெரிவித்தார். இந்த ஆய்வின் பொழுது ஜன புனிதர், மும்பை கலியபாபு உள்ளிட்டோர் உடன் வந்தார்கள்.

செய்தி -அப்பர்சுந்தரம்,மயிலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %