இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 133-வது ஆண்டு பிறந்தநாள் விழா தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப்போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்தின் சார்பில் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முத்திபாளையத்தில்13/11/2021 இன்று காலை 10.00 மணிக்கு. பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற 27 குழந்தைகளுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ்,இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் G. மாலா வரவேற்புரையாற்றினார்.மன்றத்தின் தலைவர் டாக்டர் M. சிவக்குமார் நேரு திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூர்ந்து பேசினார்.பள்ளிக்கு குழந்தைகள் தினவிழா நினைவு பரிசாக கேடயம் வழங்கினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.மன்றத்தின் நிர்வாகிகள் பி.தியாகராஜன்,டி.சரோஜாதேவி, ஏ.தங்கராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். பள்ளியில் படிக்கும் 1000 குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா நிறைவாக பள்ளியின் துணை தலைமையாசிரியர் டி.ஆனந்தன் நன்றி கூறினார்.