0 0
Read Time:1 Minute, 51 Second

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த நல்லூர் கிராமத்தில் அரசின் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி ரேவதி பிரசவ வலி ஏற்பட்டு 14ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு, ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ரேவதியின் உறவினர் இயல் ராணி, மற்றும் மருத்துவமனை உதவியாளர் செல்வி இருவரும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் ஒருவர் சிறு காயங்களோடு அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார். அதிர்ஷ்டவசமாகக் குழந்தையும் தாயும் உயிர் தப்பினர். இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வட்டார சுகாதார நிலையம் 50 ஆண்டுகளாக பழமையான கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது. இதனை மாற்றித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவத்தினால் அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %